Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் உதவி தேவைப்படுவோர் அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோல் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வங்கதேசம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஓமன் அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 47 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட் செய்த 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலுடன் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
திருப்பத்தூரில் கார் ஷெட்டில் புகுந்த சிறுத்தைக்கு பயந்து காருக்குள் தவித்த 5 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பனின் உடல் கோவில்பட்டி கொண்டு வரப்பட்டது - உறவினர்கள் சோகம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து சொந்த ஊர் மக்கள் கதறி அழும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
திருப்பத்தூரில் மூகாம்மிட்டுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தர்மபுரியில் இருந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர் சிறுத்தை எவ்வாறு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என பல்வேறு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
உக்ரைன் உடனான போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், நேட்டோ அமைப்பில் சேரமாட்டோம் என்று உக்ரைன் உத்தரவாதம் தர வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
சிறுத்தையை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.