மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: குவைத் தீ விபத்து உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நாளை கொண்டுவரப்படும்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Key Events
Background
- குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரத்தை பெற்று உடனே மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் - அயலக தமிழக நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- குவைத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 40-க்கும் அதிகமானோர் பலி - 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
- தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா - சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையிடம் காட்டம்
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு - 9 அமைச்சர்கள் உட்பட 11 பேர் கொண்ட தொகுதி வாரியாக நியமனம்
- சென்னையில் 89வது நாளாக பெட்ரோ, டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது - பெட்ரோல் - ரூ.100.75, டீசல் - ரூ.92.34
- உக்ரைன் போர், சூழலியல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பு
- பூரி ஜெகன்நாதர் கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை - நான்கு வாசல்களையும் பக்தர்களுக்கு திறக்க முதலமைச்சர் மோகன் மஜி உத்தரவு
- எந்த தொகுதி எம்.பி., ஆக தொடர்வது என மக்களை கேட்டு முடிவு செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு - மோடியிடம் பேசுவது போல தன்னிடம் பேச பரமாத்மா இல்லையே என கிண்டல்
- நிட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு - தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
- உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு - தனக்கு குழந்தை பெற்று தருவாயா? என பெண் ஊழியரிடம் கேட்டதாக தகவல்
- டி-20 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி
21:35 PM (IST) • 13 Jun 2024
குவைத் தீ விபத்து உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நாளை கொண்டுவரப்படும்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல் நாளை கொச்சி கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
20:50 PM (IST) • 13 Jun 2024
50 பேர் மரணம்! குவைத் தீ விபத்திற்கு காரணம் மின் கசிவு - விசாரணையில் தகவல்
குவைத்தில் 50 பேர் உயிரிழந்த தீ விபத்திற்கு காரணம் மின் கசிவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
19:42 PM (IST) • 13 Jun 2024
ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல்
ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
18:37 PM (IST) • 13 Jun 2024
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பரவலாக மழை... 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17:51 PM (IST) • 13 Jun 2024
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை அவகாசம்
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion