மேலும் அறிய

Breaking LIVE :சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking LIVE :சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Background

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது. நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் பெரும்பாளான கட்சி வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்தனர்.  சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் இதர தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 700 பேர் வேட்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். மேலும் பாமக தரப்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அமைப்பு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஒன்பது சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, சுவாமி ஸ்மாரானந்தா அவரது வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்தார் என எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முக்கிய நிகழ்வுகளை காணலாம். 

18:19 PM (IST)  •  27 Mar 2024

VCK - Lok sabha election 2024 : விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுத்தது தேர்தல் ஆணையம்

Pot - VCK : விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு. 

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றே முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது

17:11 PM (IST)  •  27 Mar 2024

Sadhguru Discharged : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

Sadhguru Discharged : டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு அவர்கள் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்கள் சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார். 

சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

16:54 PM (IST)  •  27 Mar 2024

சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். தனது 14 வயது மகளுடன் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய 43 வயது பெண்மணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தது சுங்கத்துறை

16:34 PM (IST)  •  27 Mar 2024

Breaking LIVE: டெல்லி முதலமைச்சருக்கு உடல்நலம் பாதிப்பு

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு  என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.  முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

16:32 PM (IST)  •  27 Mar 2024

Breaking LIVE: திருப்பூர் 25 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பூர் மக்களவை தொகுதியில் இதுவரை 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget