Breaking Tamil LIVE: டெஸ்லா கார் உற்பத்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயற்சிப்போம்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். திருநெல்வேலிக்கு வருகை தரும் இன்று மதியம் 3 மணியளவில் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கோவை செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்கிறார். பின்னர் இரவில் ராகுல்காந்தி டெல்லி செல்லும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூரில் தங்குகிறார். இதனை முன்னிட்டு இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்கிறார். 2 நாட்கள் பயணமாக இன்று மதியம் மதுரை வரும் அவர், சிவகங்கை சென்று அங்கு கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு, நாளை காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
- மதுரை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21 ஆம் தேதி திருக்கல்யாணம் நடக்கும் நிலையில் மார்ச் 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. லக்னோவில் இந்த ஆட்டமானது நடக்கிறது. முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது.
விலை உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பரப்புரை
மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பரப்புரை
டெஸ்லா கார் உற்பத்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்போம்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்திய நாட்டின் வாகன உற்பத்தியில் தலைநகராக தமிழ்நாடு உள்ளது. இப்போது "மாநிலத்தையும் மின்னணு வாகன உற்பத்தியில் தலைநகராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். மேலும் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்போம் எனவும் தெரிவித்தார்
தமிழ்நாட்டுக்கு நிதி தராத மோடி: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி
தமிழ்நாட்டுக்கு நிதி தராத மோடி. வெள்ளத்தின்போதும் கூட கருதுகோள் இல்லாமல் நிதி தர மறுக்கும் பிரதமராக மோடி இருக்கிறார்: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி
Breaking Tamil LIVE: சமச்சீரற்ற இந்தியாவாக தற்போதைய இந்தியா உள்ளது.. நெல்லையில் ராகுல் காந்தி
Rahul Gandhi in Nellai LIVE: ப்ரிட்டிஷ் காலத்தை விடவும் சமச்சீரற்ற இந்தியாவாக தற்போதைய இந்தியா உள்ளது.. நாட்டில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக பணக்காரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இரு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம் இது. இந்த தேர்தல் முக்கியமானது.. நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
Breaking Tamil LIVE: தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நெல்லை வந்தடைந்தார் ராகுல் காந்தி
Rahul Gandhi In Thirunelveli : பொதுக்கூட்டம் நடக்கும் நெல்லை ஜான்ஸ் பள்ளி மைதானத்தை வந்தடைந்தார் ராகுல் காந்தி. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்த ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி மக்களிடம் உரையாடினார்.