மேலும் அறிய

Breaking Tamil LIVE : தனது குடும்பத்தைப் பற்றிதான் முதலமைச்சர் கவலைப்படுகின்றார் - எடப்பாடி பழனிசாமி!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE : தனது குடும்பத்தைப் பற்றிதான் முதலமைச்சர் கவலைப்படுகின்றார் - எடப்பாடி பழனிசாமி!

Background

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். 

நேற்று சென்னையில் பிரதமர் மோடி ரோட் ஷோ நடைபெற்றது. ரோட் ஷோவிற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும், சென்னை மனதை வென்றது என பிரதமர் மோடி உருக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார். கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில்,  பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார். இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் அரசியல் களம் அனல் பறக்கவே, டெல்லி முதலமைச்சர் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து கைது நடவடிக்கை சட்டவிரோதமானது இல்லை என தெரிவித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம். 

18:09 PM (IST)  •  10 Apr 2024

தனது குடும்பத்தைப் பற்றிதான் முதலமைச்சர் கவலைப்படுகின்றார் - எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் தமிழ்நாடு மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரது கவலை எல்லாம் அவரது குடும்பத்தைப் பற்றியதுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியுள்ளார். 

17:27 PM (IST)  •  10 Apr 2024

Rihana Nun Outfit : இண்டர்வியூ இதழுக்கு, கன்னியாஸ்திரி உடையில் ரிஹானா அளித்திருக்கும் Pose, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Rihana Nun Outfit : இண்டர்வியூ இதழுக்கு, கன்னியாஸ்திரி உடையில் ரிஹானா அளித்திருக்கும் Pose, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளத்தில் கிறித்தவ மக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்

17:25 PM (IST)  •  10 Apr 2024

சோழிங்கநல்லூர்: நைனார்குப்பம் மீனவர் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது மீன் வறுவல் செய்த தமிழிசை செளந்தரராஜன்

17:15 PM (IST)  •  10 Apr 2024

ராம் நவமி யாத்திரைக்கு ஐகோர்ட் நிபந்தனை!

ராம் நவமி யாத்திரை இந்த ஆண்டு நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதையடுத்து மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காவல்துறை இந்த மனு தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கும்படி உத்தரவு பிறபித்துள்ளது. 

15:58 PM (IST)  •  10 Apr 2024

Breaking Tamil LIVE : ஏசியை 25-27 டிகிரி செல்சியஸில் பயன்படுத்துங்கள் - மின்சார வாரியம்

ஏ.சி. கருவியை 25லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget