மேலும் அறிய

Breaking News LIVE: விஜய் அரசியலில் மூழ்குவாரா? நீந்துவாரா? அமைச்சர் ஜெயக்குமார்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: விஜய் அரசியலில் மூழ்குவாரா? நீந்துவாரா? அமைச்சர் ஜெயக்குமார்

Background

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் நேற்று  தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

ஏமாற்றத்தையே பரிசளித்துள்ள பட்ஜெட்:

இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை;  எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை! மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை!

'இல்லா நிலை' பட்ஜெட்:

உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை! இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என  அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா? எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஜி.எஸ்.டி.  வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால்  மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 இலட்சம் கோடி ரூபாயினை ஒன்றிய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.  கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவதற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது:

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்?

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும்  இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.

மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று  நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ("four major castes")  என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.

"சமூகநீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

21:09 PM (IST)  •  02 Feb 2024

Breaking News LIVE: 50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் தென்பட்ட புலிகள்

காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டன என்று ஓசூர் வன உயரினக்காப்பாளர் தெரிவித்துள்ளார்.

16:11 PM (IST)  •  02 Feb 2024

விஜயின் அரசியல் வருகையைக் கொண்டாடிய மதுரை ரசிகர்கள்..

16:02 PM (IST)  •  02 Feb 2024

கட்சி பெயரை அறிவித்த விஜய்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வீடியோ..

14:05 PM (IST)  •  02 Feb 2024

விஜய் அரசியலில் மூழ்குவாரா? நீந்துவாரா? அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் விஜய் அரசியலில் மூழ்குவாரா? நீந்துவாரா? என்று பார்ப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

13:50 PM (IST)  •  02 Feb 2024

தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தை நடிகர் விஜய் வெளியிடுவார் - புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றி கழகத்தை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில், அந்த கட்சியின் சின்னத்தை நடிகர் விஜய் வெளியிடுவார் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget