Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- செல்போன் கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது, வரும் ஜூலை 3ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணமானது ரூ.12 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பழைய கட்டணம் ரூ.209 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கிய பின் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்று 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகின்றது.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
"ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் அன்டோனியோ கோஸ்டாவுக்கு வாழ்த்துகள், இந்தியா-ஐரோப்பிய கூட்டாண்மையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல, உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
PM Modi tweets, "Congratulations to my friend António Costa on being elected as the next President of the European Council. I look forward to working closely with you to advance the India-EU Strategic Partnership to greater heights." pic.twitter.com/M5EI5DlxgS
— ANI (@ANI) June 28, 2024
தெலங்கானா கண்ணாடி ஆலையில் விபத்து - 6 பேர் பலி
தெலங்கானா கண்ணாடி ஆலையில் விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: ஈரோடு: காரில் வந்த ஒரு கோடி ரூபாய்.. பணத்தை பறிமுதல் செய்த போலீசார்..!
ஈரோடு கோவிந்தராஜ் நகரை சார்ந்த மதனகோபால் என்பவர் தனது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த ஒரு கோடி பணத்தை காரில் கொண்டு வந்த போது கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கோடி பணம் இருந்ததை அடுத்து ஒரு கோடி பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
Breaking News LIVE: இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு..!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிக்களுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.