Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வை வரும் ஜூன் 25-ம் தேதி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 9.45 மணியளவில் தொடங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்தது.
- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
- மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் விற்ற நபர் கைது - 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில் அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.