Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடி ஒப்புதல் வழங்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவு
- சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை - நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ மழை பதிவு
- கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா - தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகுவதாக தகவல்
- திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு - அதிகாரிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
- அக்னிவீர் திட்டம் தொடர்பாக கடவுள் சிவன் முன்பு பொய் சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங் - வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி விமர்சனம்
- மணிப்பூர் பிரச்னையில் எண்ணெயை ஊற்றி பெரிதாக்க நினைப்பவர்களை அந்த மக்கள் புறக்கணிப்பார்கள் - பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேச்சு
- ஹத்ராஸில் நூறுக்கும் அதிகமானோர் பலியானது தொடர்பாக ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
- பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
- ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் ராஜினாமா - விரைவில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்
- டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்பியது - பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துகள் பெற திட்டம்
- உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி திறந்தவெளி பேருந்தி இன்று மாலை மும்பையில் பேரணியாக செல்ல இருக்கிறது
- அசாமில் வெள்ளம் - 46 பேர் உயிரிழந்த நிலையில், 16 லட்சம் பேர் பாதிப்பு
- கேரளாவில் அதிர்ச்சி - 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண்ணின் உடல் காதல் கணவனின் வீட்டில் மீட்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் காலை உணவுத் திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் ஆகிய திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹத்ராஸ் செல்லும் ராகுல் காந்தி!
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உத்தர பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோபஸ், அந்தோணி மற்றும் முருகானந்தம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோபஸ், அந்தோணி மற்றும் முருகானந்தம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Breaking News LIVE: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இரவு 8 மணிவரை வெளுக்க போகும் மழை!
Breaking News LIVE: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இரவு மணி 8.30 மணி வரையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 4, 2024