மேலும் அறிய

Breaking NEWS LIVE: அமைச்சர் உதயநிதி, புவனேஸ்வர் நகரில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking NEWS LIVE:  அமைச்சர் உதயநிதி, புவனேஸ்வர் நகரில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 243வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 242ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (ஜனவரி.19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

20:13 PM (IST)  •  19 Jan 2023

அமைச்சர் உதயநிதிபுவனேஸ்வர் நகரில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புவனேஸ்வர் நகரில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

14:17 PM (IST)  •  19 Jan 2023

ஈரோடு இடைத்தேர்தல் தேமுதிக..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பங்கு பெறுவது குறித்து ஜனவரி 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13:31 PM (IST)  •  19 Jan 2023

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும் - முதலமைச்சர்..!

தமிழ்நாட்டு மக்களின்  நம்பிக்கையின் காவல்துறை பெற வேண்டும் என சட்டம் - ஒழுங்கு குறித்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

13:00 PM (IST)  •  19 Jan 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மீண்டும் போட்டியிடும் - காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மீண்டும் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். இது குறித்து கூட்டணிக் கட்சிகளை இன்று மாலைக்குள் சந்தித்து பேசவுள்ளதாக கூறியுள்ளார். 

12:52 PM (IST)  •  19 Jan 2023

மக்களைத் தேடி மருத்துவம் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்..!

1 கோடிக்கும் மேலான பயனாளர்களைக் சென்றடைந்த திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்ட திட்டம் என செய்தியாளர்கள் சந்திபில் கூடியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Embed widget