Breaking News LIVE Today: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2கட்ட தடுப்பூசி டோஸ் கட்டாயம் - ரயில்வே
Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
Breaking News Tamil LIVE:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் முடிவடைந்தது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளுடன் இன்று தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2கட்ட தடுப்பூசி டோஸ் கட்டாயம் - ரயில்வே
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2கட்ட முழு தடுப்பூசி டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியா -சீன ராணுவ அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி நடைபெறும் - அமைச்சர்
இந்தியா -சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.





















