மேலும் அறிய
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்
- தீபாவளிக்காக வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
- சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளால் கிளாம்பாக்கத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் – கூடுதல் மின்சார ரயில்களுக்கும் ஏற்பாடு
- அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள் – உமர் அப்துல்லா கண்டனம்
- தொடர் தாக்குதல்கள்; இன்று கூடுகிறது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டம்
- எனது தந்தை கொலை வழக்கில் சிக்கியவரை கட்டியணைத்து பரிவு காட்டியவர் பிரியங்கா காந்தி – ராகுல் காந்தி பேச்சு
- மோடி அரசாங்கம் அவர்களது பணக்கார நண்பர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது – பிரியங்கா காந்தி
- மாவட்ட வாரியாக ஆய்வுப்பணி; கோவையில் நாளை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க முடியும் என்ற மாயையை உருவாக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
- சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக முயற்சிக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு
- அடுத்தடுத்து அதிரடி; தமிழ்நாடு முழுவதும் வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்?
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு; வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- தமிழ்நாட்டில் வரும் 9ம் தேதி வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை; இன்றும், நாளையும் ரத்து
- ஈரோட்டில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை விற்பனை – 5 பேர் கைது
- கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்திலே மது அருந்தும் தி.மு.க. பிரமுகர் – ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வைரல்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மழைநீரை அகற்றக் கோரி தாசில்தாரை முற்றுகையிட்ட மக்கள்
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து இந்தியா மோசமான சாதனை
09:44 AM (IST) • 05 Nov 2024
இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்!
இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது, ரூ.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்! - அமைச்சர் சேகர் பாபு
16:35 PM (IST) • 04 Nov 2024
குற்றப்பத்திரிகை நகலை 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவ.14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
குற்றப்பத்திரிகை நகலை 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவு.
Load More
Tags :
Latest News Live #TN Rains News Update Breaking News LIVE Breaking News Update Latest News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
அரசியல்





















