மேலும் அறிய
Breaking News LIVE OCT 3: 32,500 ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் -எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல – திருமாவளவன் பேச்சு
- தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதில் தி.மு.க.வுக்கும் உடன்பாடு உண்டு – திருமாவளவன் பேச்சு
- தி.மு.க.வின் வெற்றிக் கூட்டணியைப் பார்த்து எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல்; எதிரிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறாது – தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
- என் வாழ்நாளில் ஒருநாள் கூட நான் மதுவைத் தொட்டதில்லை – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி
- தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக மதுக்கடைகளை மூடும் கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
- இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு அமெரிக்க பாதுகாக்கும் – ஜோ பைடன் திட்டவட்டம்
- லெபனானைத் தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு
- ஈரானுக்கு எதிரான போரில் கடவுளின் உதவியால் நாங்கள் வெல்வோம் – இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
- டென்மார்க் அருகே இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – கையெறி குண்டுகளை வீசிய 3 பேர் கைது
- டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு; தடுப்பு வேலி அமைத்து ஏராளமான போலீசார் குவிப்பு
- செஞ்சி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாதிய வன்கொடுமை; பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா
- தி.மு.க. ஆட்சியில் பட்டியலின தலைவர் கிள்ளுக்கீரையாக நடத்தப்படுகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- சேலம் அருகே பேட்டரி மூலம் மிதிவண்டி இயக்கி அரசுப்பள்ளி மாணவர் சாதனை
- தாய்லாந்து, துபாய் நாடுகளில் இருந்து திருச்சிக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்
- கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் – நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது
- ஆற்காடு அருகே மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண்; மக்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு ஆர்.காந்தி எச்சரிக்கை
- வேலூரில் பாதாள சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு; சாலைகளில் வெள்ளம்போல ஓடிய கழிவுநீரால் மக்கள் பாதிப்பு
16:35 PM (IST) • 03 Oct 2024
Breaking News LIVE OCT 3: 32,500 ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்-இபிஎஸ்
Breaking News LIVE OCT 3: 32,500 ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15:25 PM (IST) • 03 Oct 2024
திருப்பத்தூர்: இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் பலர் அனுமதி.!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கிட்னியில் நோய் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் வேட்டப்பட்டு அருகே உள்ள சுடுகாட்டில் உடலை புதைக்க இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் உடலை தூக்கிச் சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கிருந்து நபர்கள் பட்டாசு வெடித்ததில் அருகே உள்ள புளிய மரத்தின் தேன் கூட்டின் மீது விழுந்து தேனீக்கள் நான்கு பக்கமும் சிதறி பறந்தன. அப்போது தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இறுதிச் சடங்கு கலந்து கொண்ட நபர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Load More
Tags :
TN Weather Breaking News Live Update CM MK STALIN News Update Latest News Update Breaking News LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















