மேலும் அறிய
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் இன்று நேரில் சந்திப்பு
- பிரதமருடனான சந்திப்பில் தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்த திட்டம்
- திருப்பூர் தாராபுரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்
- திருவள்ளூரில் உள்ள பள்ளிப்பட்டில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளை
- 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்ய உள்ளதாக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி – தமிழக அரசு விளக்கம்
- சர்க்கரை, எத்தனால் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை – மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று பதவியேற்பு – தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
- சங்கரன்கோவில் கொலை வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை , 5 பேருக்கு ஆயுள் தண்டனை– 11 குற்றவாளிகளுக்கு ரூபாய் 13 லட்சம் அபராதம்
- அமராவதி புதிய பாசன அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
- 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. உற்சாக வரவேற்பு – அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை – நன்றி தெரிவிக்கவே டெல்லி சென்றுள்ளார் மு.க.ஸ்டாலின் என அ.தி.மு.க. விமர்சனம்
- தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு – அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்
- வார விடுமுறை, காலாண்டு விடுமுறை; சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு எதிரான கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- காரைக்காலில் இடிந்து விழும் அரசு சித்த மருத்துவமனை; அச்சத்தில் நோயாளிகள்
- திண்டுக்கல் மாவட்டத்தில் மர்ம நபர்களால் தி.மு.க. நிர்வாகிகள் வெட்டிப் படுகொலை – போலீசார் தீவிர விசாரணை
- மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வாழைத் தார்களை மக்கள் வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு
- புதுச்சேரியில் கடந்த 9 மாதங்களில் 3 ஆயிரத்து 712 இணையவழி மோசடி புகார்கள் – ரூபாய் 35 கோடி இழப்பு
- இந்தியா – வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் கான்பூரில் தொடக்கம்
17:00 PM (IST) • 27 Sep 2024
Breaking News LIVE:சென்னை பல்கலைக்கழகம் -எம்.எல் படிப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
unom.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக கூடுதல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள் அக்.25ம் தேதிக்கு வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க நேரிடும்.
16:55 PM (IST) • 27 Sep 2024
Breaking News LIVE:திரையரங்கில் வைத்திருந்த கட்-அவுட் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
ஜூனியர் NTR நடிப்பில் உருவான ‘தேவாரா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் திரையரங்கில் வைத்திருந்த கட்-அவுட் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது தீப்பொறி தெறித்ததில், கட்-அவுட் எரிந்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















