மேலும் அறிய
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது – பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
- சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடும் பாதிப்பு – பயணிகள் அவதி
- மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழை – பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
- தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
- மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம் – பொதுமக்கள் அவதி
- தொடர் கனமழையால் மும்பையில் மின்சார ரயில்கள் ரத்து; விமான சேவைகளும் ரத்து – பயணிகள் பெரும் அவதி
- ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- போலி பத்திரம் மூலம் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வழக்கு; பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் கைது
- புதுச்சேரியில் பரவும் டெங்கு காய்ச்சல் – சுகாதாரத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனை
- குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் தொடர்ந்து 14 மணி நேரம் விசாரணை; மனிதநேயத்திற்கு எதிரானது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்
- பெங்களூரில் பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த வழக்கு; முக்கிய குற்றவாளி ஒடிசாவில் தற்கொலை
- வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை; நாளை முதல் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்கள் அபகரிப்பு – காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம் – நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்
- ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தல்; 56 சதவீத வாக்குப்பதிவு
- ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா,ஜ.க.வின் ஆட்சி அமையாது – மெகபூபா முக்தி
- மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்ட ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுகிறது – ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விமர்சனம்
- விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க.வின் சதியை இந்தியா கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது; வேளாண் சட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் – ராகுல் காந்தி
- நீட் தேர்வு குளறுபடி வழக்கு; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டது
20:40 PM (IST) • 26 Sep 2024
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
18:24 PM (IST) • 26 Sep 2024
செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. நீதிபதியின் உத்தரவை அடுத்து சிறையில் இருந்து வெளியே வர உள்ள செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















