Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இன்று நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
- உக்ரைனுக்குச் சென்ற இந்திய பிரதமர்; அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு
- பழனியில் இன்று தொடங்குகிறது முத்தமிழ் முருகன் மாநாடு – கோலாகலமாக காட்சி தரும் பழனி
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம்
- நாகை மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை
- தொடர் விடுமுறை! சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
- நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 27 இந்தியர்கள் உயிரிழப்பு
- கலை மூலமாக மக்களை மாற்ற முடியும் என்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறேன் – மாரி செல்வராஜ்
- ஆல் டைம் பேவரைட் இந்திய அணியில் தோனியைச் சேர்க்காதது மிகப்பெரிய தவறு – தினேஷ் கார்த்திக்
Breaking News LIVE: அடுத்த 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: அய்யனார் கோயிலில் எம்.பி. மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம்!
மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் உள்ள ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அய்வேத்தனேந்தல் பகுதியில் சாலை அமைத்துத் தர வேண்டும் என மாணிக்கம் தாகூரிடம் பொதுமக்கள். கோரிக்கை வைத்தனர்.
Breaking News LIVE: அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஹாங்காங் சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ்!
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட 20 மாணவர்களை ஹாங்காங் நாட்டில் உள்ள Disneyland-க்கு அழைத்துச் சென்றுள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுடன் ஹாங்காங் நாட்டிற்கு சென்றடைந்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 24, 2024
அந்நாட்டிலுள்ள #Disneyland_Hongkong பூங்காவிற்கு மாணவச் செல்வங்களை அழைத்துச் சென்றோம்.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ள எங்களின் பயண வழிகாட்டிகளுக்கு நன்றிகள்.@tnschoolsedu pic.twitter.com/x3IVp4oBip
நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் மற்றும் கல்வி அலுவலர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பேருந்தில் இன்று அழைத்துசென்றேன்.
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்த மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தேன்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பேருந்தில் இன்று அழைத்துசென்றேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 24, 2024
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்களைப் பற்றி… pic.twitter.com/JUWMm0bvhD
போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும்... சனிக்கிழமை காலை நடைபெறும் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்” : சென்னையில் வரும் 31ம் தேதி, செப் 1ம் தேதி நடைபெறவுள்ள F4 கார் பந்தயம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்