Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Background
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கோவை: உக்கடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 4 கிராம் தங்கம், மிக்ஸி, கட்டில் என ₹1.20 லட்சம் மதிப்பிலான 45 வகையான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.
முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது வங்கதேசம்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது வங்கதேசம். ரபாடா, மகாராஜ் மற்றும் முல்டர் ஆகியோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
"அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.. பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை” ‘பராசக்தி’ பட வசனத்தை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

