Breaking News LIVE 17th oct 2024: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Background
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்
கொலை வழக்கில் ஆயுள் கைதியாக புழல் சிறையில் உள்ள வீரபாரதி தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரி மனு செய்திருந்தார். அதில் முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும் அதை ஆளுநர் மீற முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. மனுதாரரை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ளுநர் கட்டுப்பட்டவர்; அதை ஆளுநர் மீற முடியாது.
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 17, 2024
Breaking News LIVE 17th oct 2024: ஹரியானா முதலமைச்சராக பாஜகவின் நயாப் சிங் சைனி பதவியேற்பு.!
Breaking News LIVE 17th oct 2024: ஹரியானா மாநிலத்தில் 3வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்
ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை , வெயில்தான் இருந்தது. ஓரளவு மழை பெய்த மழைக்கே, பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்
ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேலை நிறுத்தம் தொடர்பாக 15 ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.

