Breaking News LIVE: திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தும் டாட்டூ குத்திய 2 பேர் கைது
Breaking News LIVE 16th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தும் டாட்டூ குத்திய 2 பேர் கைது
திருச்சியில் ஆபத்தான முறையில் நாக்கை பிளவுபடுத்தும் முறையில் டாட்டூ குத்திய 2 இளைஞர்களை போலீசார் கை செய்தனர்.
வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புதியதாக உருவாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷூற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

