மேலும் அறிய
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- விவசாயிகளுக்கு பிரத்யே டிஜிட்டல் அட்டை வழங்க நடவடிக்கை – மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை
- மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
- நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை; ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
- ஒரே நாளில் 6 பேர் கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்; தமிழக டி.ஜி.பி. விளக்கம்
- புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
- சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக்குப் பேச அழைத்தது யார்? என்று இன்று காலைக்குள் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியை தமிழரசிக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- பாவம் செய்தவர்களுக்கு மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும்; அமைச்சர் காந்தி பேசிய வீடியோ வைரல்
- பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டில் திட்டம் தீட்டியது அம்பலம் – என்.ஐ.ஏ.
- ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கியது
- கொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் மனிதசங்கிலி போராட்டம்
- கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு போராடிய பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப திட்டம்
- திருநெல்வேலி ராதாபுரத்தில் முன்விரோதத்தால் எதிர்வீட்டுச் சிறுவன் படுகொலை – பெரும் பதற்றம்
- வாக்காளர்கள் பட்டியல் பெயர் நீக்கம்; தி.மு.க. புகாருக்கு சத்யபிரதாப் சாஹூ விளக்கம்
- சென்னையில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் அட்டை வைக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு
- போதைப் பொருள் புழக்கத்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் – நீதிமன்றம் அதிருப்தி
- உத்தரபிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் – சரக்கு ரயில் இழுத்து வந்தது
- நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்
- வியட்நாமில் புயல் பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு
21:32 PM (IST) • 10 Sep 2024
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூர் புதுநகரில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 4 அரசு பள்ளி மாணவிகள் மாயமாகியுள்ளதாக புகார் வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
20:11 PM (IST) • 10 Sep 2024
Breaking News LIVE: மார்க்.கம்யூ பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விரைவில் குணமடைய விழைகிறேன் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: மார்க்.கம்யூ பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குணமடைய விழைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















