Breaking LIVE : புதுக்கோட்டையில் ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- நீதிபதி கேள்வி
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Background
புதுக்கோட்டையில் ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- நீதிபதி கேள்வி
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது, எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு..!
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு? வானிலை அறிவிப்பு நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த காவல்துறை அனுமதி பெறத் தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த காவல்துறை அனுமதி பெறத் தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை
நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

