மேலும் அறிய

Breaking News Tamil LIVE: பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிப்பு

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

LIVE

Key Events
Breaking News Tamil LIVE: பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிப்பு

Background

சென்னையில் இன்றும் பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 56 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் 56வது நாளாக இன்று ( ஜூலை 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

20:09 PM (IST)  •  16 Jul 2022

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது...

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,340 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 2,312 ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று 2,340 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி 2,599 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகபட்சமாக சென்னையில் 607 ஆக பதிவாகியுள்ளது. 

19:56 PM (IST)  •  16 Jul 2022

பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிப்பு

பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

19:29 PM (IST)  •  16 Jul 2022

ஆன்லைன் ரம்மியால் காவலர் மரணம் - இபிஎஸ் கண்டனம்

ஆன்லைன் ரம்மியால் காவலர் காளிமுத்து உயிரிழந்த விவகாரத்தில் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மியை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17:28 PM (IST)  •  16 Jul 2022

என்னை ஏன் அம்மா கூடவே ஒப்பிட்டாங்க.. நயன்தாரா கூட ஒப்பிடுவது எதிர்ப்பார்த்ததுதான்.. பழகிவிட்டது - ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

என்னை ஏன் அம்மா கூடவே ஒப்பிட்டாங்க.. நயன்தாரா கூட ஒப்பிடுவது எதிர்ப்பார்த்ததுதான்.. பழகிவிட்டது - ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

15:52 PM (IST)  •  16 Jul 2022

200 கோடி டோஸ் செலுத்தப்பட்டது

நாடு முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது- மத்திய சுகாதாரத்துறை தகவல் 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget