’சல்மான் கானைக் கொல்லத் திட்டம் போட்டோம்!’ - வாக்குமூலம் கொடுத்த லாரன்ஸ் பிஷ்னோய்
பஞ்சாபின் மான்சாவில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட மூஸ்வாலாவின் தலைவிதியை சல்மான் கானும் அவரது தந்தையும் சந்திப்பார்கள் என்று அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது
பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், பாலிவுட் நடிகர் சல்மான் கானை 2018 ஆம் ஆண்டு "கொல்ல விரும்பியதாக" விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
1998ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த 'ஹம் சாத் சாத் ஹைன்' படப்பிடிப்பின் போது சல்மான் கான் மானை வேட்டையாடி விவகாரம் தொடர்பாக அவரை தான் கொலை செய்ய விரும்பியதாக பிஷ்னோய் போலீசாரிடம் கூறியதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
View this post on Instagram
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 3 பேர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானை மிரட்டி கடிதம் கொடுத்ததாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 2022ம் ஆண்டு மே 29 அன்று பஞ்சாபின் மான்சாவில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட மூஸ்வாலாவின் தலைவிதியை சல்மான் கானும் அவரது தந்தையும் சந்திப்பார்கள் என்று அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானை கொலை செய்யத் தோன்றக் காரணம் என்ன என்று கேட்டதற்கு ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் உள்ள பிஷ்னோய் சமூகத்திற்கு சின்காரா அல்லது பிளாக்பக்ஸ் என்னும் வகை மான் மிகவும் பிடிக்கும் என்று விசாரணையின் போது பிஷ்னோய் கூறியதாக கூறப்படுகிறது.
1998 அக்டோபரில் இரண்டு கரும்புலிகளைக் கொன்றதற்காக கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 2018 ஏப்ரலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜோத்பூர் சிறையில் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்த கான், பின்னர் பரத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.