மேலும் அறிய

'ரேப் ஜோக்ஸ்! நாங்க தெரிஞ்சு பண்ணல, மன்னிச்சுடுங்க!' அடித்த அடியில் பின்வாங்கிய ஷாட் விளம்பரம்!

நெட்டிசன்களின் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

Layers shot பெர்ஃப்யூம் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றின் சமீபத்திய விளம்பரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தனர். நெட்டிசன்களின் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரம் குறித்து Layers shot நிறுவனம் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

விளம்பரத்தில் உள்ள சர்ச்சை

ஒரு அறையில் ஒரு இளம் ஜோடி பாலுறவுக்கு தயாராகிறார்கள். அந்த அறையை தட்டாமல், கொள்ளாமல் உள்ளே நுழைகிறார்கள் அந்த ஆணின் நண்பர்கள். அதில் ஒருவர் கேட்கிறார், "ஷாட் எடுத்துக்கலாமா" என்று. இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு இளம் ஜோடி திரு திருவென முழிக்கிறார்கள். பின்னர் மேசையின் மீது இருக்கும் லேயர் ஷாட் ஸ்ப்ரேயை எடுத்து உடலில் அடித்துக்கொண்டு "இந்த ஷாட்டை சொன்னேன்" என்கிறார். வரையறை இன்றி பெண்களை இழிவுபடுத்தும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் விமர்சித்தார்கள்.பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை பதிவிட்டனர். 

மகளிர் ஆணையம் கண்டனம்

Layers shot எனும் வாசனை திரவிய நிறுவனத்தின் இந்த விளம்பரத்துக்கு எதிராக முன்னதாகப் பதிவிட்ட டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், ”இந்த விளம்பரம் அச்சமுட்டூம் வகையில் உள்ளது.  கூட்டுப் பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை இவர்கள் தெளிவாக ஊக்குவிக்கிறார்கள். நிறுவன உரிமையாளர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எஃப்ஐஆர் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி I&B அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ எனக் கூறினார். இது குறித்து அப்போதே  பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர், ”தவறான, இழிவான இந்த விளம்பரம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூடியூப் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்குமாறு ஏற்கெனவே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது என்றார்.

வருத்தம்..

இந்நிலையில் தங்களது விளம்பரம் குறித்தும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது Layers shot. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், ''நாங்கள், உரிய மற்றும் கட்டாய ஒப்புதல்களுக்குப் பிறகே, விளம்பரங்களை ஒளிபரப்பியுள்ளோம். யாருடைய உணர்வுகளையும்,புண்படுத்தவோ, பெண்களை கொச்சப்படுத்தவோ எண்ணவில்லை. எவ்வாறாயினும், தனிநபரிடத்திலும் சமூகத்திலும் கோபத்தை ஏற்படுத்திய விளம்பரத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget