Bill Gates India Trip: இந்தியாவுக்கு வந்து திரும்பிய பில்கேட்ஸ்... நமது நாட்டைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
இந்தியாவுக்கு ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தனது இந்தியப் பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு ஒரு வார கால பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா திரும்பியுள்ளார். இந்தியாவில் அவர் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர்கள் என பலரைச் சந்தித்தார். அமெரிக்கா திரும்பியுள்ள பில்கேட்ஸ், இந்திய பயணத்தினைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் சுருக்கமாக, சில புகைப்படங்களுடன் தனது இந்திய பயண அனுபவம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தான் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில், அவர் தான் பிரதமர் நரேந்திர மோடி, அன்ஷுல் பட், யூடியூபர் மற்றும் பிரஜக்தா கோலி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும், இ-ரிக்ஷா ஓட்டியதையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மேலும், "நான் இந்தியாவிற்கு சுற்றுபயணம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளேன், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் கற்றுக்கொள்வதற்கான ஒரு நம்பமுடியாத வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவிற்கு மீண்டும் செல்வதை நான் விரும்புகிறேன்" என்று பில்கேட்ஸ் தனது பதிவின் தலைப்பில் எழுதினார்.
மேலும், பில்கேட்ஸ் தனது பதிவில், "கடந்த வாரம் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரில் நான் மேற்கொண்ட பயணத்தின் போது, உலகின் ஆரோக்கியம், காலநிலை ஆகியவற்றிற்கு தீர்வு காண அறிவியல் தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை எனக்குக் கற்பித்த சில அற்புதமான மனிதர்களை நான் சந்தித்தேன்.
பில்கேட்ஸ் தனது இந்திய பயணத்தின் போது, பிரதமர் மோடி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, ஜீரோதா நிறுவனர் நிதின் மற்றும் நிகில் காமத், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் உரையாடினார். பூரி, ஸ்மிருதி இரானி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் உட்பட பலரயும் சந்தித்தார்.
தனது சமீபத்திய பதிவு ஒன்றில் பில்கேட்ஸ், "பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு விலையில் ஏராளமான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் அற்புதமான திறனுக்காக இந்தியாவை பாராட்டினார், மேலும் இந்த தடுப்பூசிகள் COVID இன் போது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாகக் கூறினார்.