மேலும் அறிய

காதலனுக்கே மனைவியை கல்யாணம் செய்து வைத்த சம்பவம்.. சினிமாவையே மிஞ்சிய உண்மை..

பீகாரில் மனைவியை காதலித்த நபருடனே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில்தான் நாம் திருமணமான மனைவியை அவரது காதலுடன் கணவர் சேர்த்து  வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இது மிகவும் கடினமான ஒன்று. அப்படி ஒரு சம்பவம் தற்போது பீகாரில் அரங்கேறியுள்ளது.

மனைவியின் காதல்:

பீகாரில் வசித்து வருபவர் அஜய்குமார். இவருக்கு வயது 24. இவரது மனைவி காஜல். இவருக்கு வயது 22. இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் ஆகியது. திருமணமாகி 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில், காஜலுக்கு அதே பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் காஜலின் கணவர் அஜய்குமாருக்கு தெரிய வந்துள்ளது.

காதலருடன் திருமணம் செய்து வைத்த கணவர்:

மனைவி வேறு ஒரு நபரை காதலிக்கிறார் என்று அறிந்த அஜய்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் காஜலிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் ராஜ்குமாரை தீவிரமாக காதலிப்பதை உணர்ந்த அவர் இனியும் காஜலுடன் வாழ்வது சரியல்ல என முடிவு செய்தார். மேலும், காஜலை அவரது காதலுடனே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, அதே ஊரில் உள்ள கோயிலில் தனது மனைவி காஜலுக்கும், ராஜ்குமார் தாக்கூருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அஜய்குமாரின் இந்த செயலுக்கு அந்த ஊர்க்காரர்களும், அவர்களது உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தனது முடிவில் இருந்து பின்வாங்காத அஜய்குமார் தனது மனைவி காஜலுக்கும், அவர் காதலித்த ராஜ்குமாருக்கும் அதே ஊரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்தார்.

அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலமாக தனது ஊர்காரர்களிடம் இருந்தும், அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் காஜல் – ராஜ்குமாரை காப்பாற்றலாம் என்று அஜய்குமார் கருதியதாலே இந்த ஏற்பாட்டை அவர் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், காஜல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

கணவனே தனது மனைவியின் காதலுக்காக அவர் விரும்பிய நபருடன் அவருக்கு ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: பெண் மருத்துவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்!

மேலும் படிக்க: INDIAN NAVY: கடற்கொள்ளைக்கு செக்! இந்திய கடற்படையின் மூவ்! கினியா வளைகுடாவில் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து வெற்றி

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget