அந்த வழக்குக்கும் எனக்கும் சம்மந்தமில்லை - விளக்கம் கொடுத்த டிக்டாக் நித்யா..
சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் funbucket பார்கவ் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ஹைதராபாதில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
சிறுமியை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் டிக் டாக் பிரபலம் funbucket பார்கவ் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ஹைதராபாதில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் funbucket பார்கவுடன் டிக் டாக்கில் இணைந்து வீடியோக்கள் வெளியிடும் நித்யா என்பவர்தான் அந்த பாதிக்கப்பட்ட பெண் என்ற தகவல் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, அந்த நிகழ்வு குறித்து சிறுமி நித்யா தற்போது விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.
டிக்டாக் தலத்தில் 'Oh My God', 'Oh My God' என்ற வீடியோக்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் நித்யா. மேற்குறிப்பிட்ட அந்த டிவீயோக்களில் அவர் பலமுறை பார்கவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் POCSO சட்டத்தின் கீழ் கைதான பார்கவின் விஷயத்திற்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். பார்கவுடன் இணைந்து விடியோக்கள் எடுத்து ஓர் ஆண்டுக்கும் மேலாகிவிட்டது என்றும், எதிர்வரும் காலங்களில் அவருடன் இணைந்து வீடியோக்களை எடுக்கும் எண்ணமும் இல்லை என்று அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் நித்யா தெளிவுபடுத்தியுள்ளார்.
டிக்டாக் வீடியோக்களால் மிகவும் பிரபலமடைந்தவர் தான் சிப்பாடா பார்கவ். விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்கவ் உடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பார்கவுக்கு ஊடகத்தினர் பலர் நெருக்கம் என்றும், அதனால் அந்த சிறுமிக்கு மீடியா சேனல்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை நம்பிய சிறுமி, பார்கவுடன் பேசி வந்த நிலையில், பார்கவின் பேச்சு, செயல்கள் மோசமாக இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து விலகினார்.
ஆனால், பார்கவ் தன்னிடம் அந்த பெண்ணின் வீடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டியதோடு மட்டுமல்லாமல், சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.