மேலும் அறிய

பிரதமர் மோடியின் கூட்டங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்பட்டதா...? விளாசிய ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட்..! 

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவை எட்டி உள்ளது.

அடுத்தபடியாக, நடைபயணம் நாளை டெல்லியை சென்றடைய உள்ளது. இதற்கிடையே, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. அதேபோல, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபயணத்தில் முகக்கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடந்து வரும் நடைபயணத்திற்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் எண்ணிக்கையை பார்த்து பயந்து காங்கிரஸ் தலைமையிலான நடைபயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைபயணம் டிசம்பர் 21ஆம் தேதி காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும் மோடி அரசாங்கமும் இங்கு கூடியிருந்த பெரும் கூட்டத்தைக் கண்டு மிகவும் பயந்து, மத்திய சுகாதார அமைச்சர் ராகுல் காந்திக்கு டிசம்பர் 20 அன்று கொரோனா விதிகளை பின்பற்றுமாறு கடிதம் எழுதினார். 

பொது சுகாதாரம் குறித்த கவலைகள் உண்மையானதாக இருந்தால், சுகாதார அமைச்சர் பிரதமருக்கு முதலில் கடிதம் எழுதியிருக்க வேண்டும். பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் ஒரு பேரணியை நடத்தினார். அங்கு கோவிட் நெறிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. 

கோவிட் இரண்டாவது அலையின்போது, மேற்கு வங்கத்தில் பிரதமர் பெரிய பேரணிகளை நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் நோக்கத்தில் அரசியல் இல்லை என்றால் அவரது கவலை நியாயமானது என்றால், அவர் பிரதமருக்கு முதல் கடிதம் எழுதியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"குஜராத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டதா" என காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget