Best Whisky Award: உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு! என்ன பிராண்ட் தெரியுமா?
உலகின் தலைசிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஜான் பார்லிகான் விருது வழங்கப்பட்டது.
மதுவிலே பல வகை மதுக்கள் உண்டு. அதில் விஸ்கி மிகவும் பிரபலமானது. உலகில் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தும் மதுபானங்களில் விஸ்கியும் ஒன்று ஆகும். பல நாடுகளில் விஸ்கி உணவுடன் சேர்த்து மக்களால் குடிக்கப்படுகிறது.
சிறந்த விஸ்கி தேர்வு:
மலிவு விலை முதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விஸ்கி பல விலைகளில் விற்கப்படுகிறது. அந்த விலை அதன் தரத்திற்கு ஏற்ப மாறும். உலகின் பல நாடுகளிலும் விஸ்கி தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. உலகின் தலைசிறந்த விஸ்கி என்று ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்தாண்டிற்கான சிறந்த விருது ஜான் பார்லிகான் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுக்கான போட்டியில் விஸ்கிக்கு புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நாட்டு விஸ்கி நிறுவனங்கள், அமெரிக்க விஸ்கி உள்பட பல நாட்டின் புகழ்பெற்ற விஸ்கி இடம்பெற்றது. அதில், இந்தியா சார்பில் ராம்பூர் அஸ்வா இடம்பெற்றது. பல விஸ்கி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த விருதுக்கான போட்டியில் இந்தியாவின் ராம்பூர் அஸ்வாவிற்கு சிறந்த விஸ்கிக்கான விருது வழங்கப்பட்டது.
View this post on Instagram
இந்த விஸ்கியானது இந்திய மதிப்பில் வரி இல்லாமல் 9 ஆயிரத்து 390 ரூபாய் ஆகும். இந்த விஸ்கியின் தனித்துவம் என்னவென்றால், இது ஒரே மூலப்பொருள் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்த விஸ்கி நிறுவனமானது 1943ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023ல் நடைபெற்ற மொத்த விற்பனையில் இந்திய சிங்கிள் மால்ட்களின் விற்பனை மட்டும் 53 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே அயல்நாட்டு சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் விஸ்கிகளுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?