ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளரும் நகரம் இதுதான் - ஆக்ஸ்போர்ட் எகானமிக்ஸ் அறிவிப்பு..!
2023ல் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பெங்களூரு வேகமாக வளரும் நகரமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் என்ற தனியார் பொருளாதார ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023ல் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பெங்களூரு வேகமாக வளரும் நகரமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் என்ற தனியார் பொருளாதார ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைக் குழுவானது பெங்களூரு ஆசியா பசிபிக் பிராந்தியத்திலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பங்களிக்கும் என்றார். பெங்களூருவின் வளர்ச்சியானது பாங்காக், ஷாங்காய், பீஜிங், ஹாங்காங், டோக்கியோ போன்ற பெரிய நிறுவனங்களுக்குக் கூட சவால்விடுவதாக இருக்கும்.
பெங்களூரு நகரமான கர்நாடகா இந்தியாவின் சிலிக்கான் வேலி (பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) ஏற்றுமதியாளராக அதன் பங்கு இருப்பதால், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. நகரத்தில் நிறைய புதிய நிறுவனங்கள் (startups) வருவதாலும் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அண்மையில் வெளியான அறிவிப்பு:
சர்வதேச அளவில், குறித்த நேரத்தில் விமான சேவை வழங்கியதாக பெங்களூரு விமான நிலையத்திற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் உள்ளது கெம்பேகவுடா விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விமான தரவு பகுப்பாய்வு நிறுவனம் சர்வதேச அளவில் விமானங்களில் புறப்பாடு, விமான நிலையத்திற்கு வரும் நேரம் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து இறங்குவதை குறித்த நேரத்தில் மேற்கொள்வதில் பெங்களூரு விமான நிலையத்திற்கு 2-வது இடம் கிடைத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள ஹனடே விமான நிலையத்திற்கு முதல் இடம் கிடைத்து உள்ளது. 7-வது இடத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் பெங்களூருவின் வளர்ச்சிக்கு ஒரு சான்றுதான்.
ஹெலிகாப்டர் சேவை கூட உள்ளது:
இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படும் பெங்களூரு நகரில் வெகுவிரைவில் ஹெலிகாப்டர் பயண சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை ‘பிளேட் இந்தியா’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பயணத்திற்கான கட்டணம் மற்றும் முன்பதிவு உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் என பல பேர் அங்கு வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். அதனால் அங்கு வாகன நெரிசலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே சேவை வழங்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் உள்ளது. இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்க 2 மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் போது வெறும் 12 நிமிடங்கள் தான் ஆகிறது. இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே இரு மார்க்கத்திலும் சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மற்றும் மாலை 4.15 என பயண நேரம் உள்ளது.