Swag Paati | வாரே வா தோழி வயசான தோழி.. இங்கிலீஷில் அசத்தும் சாலையோர ஸ்வாக் பாட்டி..! (வைரலான வீடியோ)
சாலை ஓரத்தில் வசிக்கும் முதிய வயது பெண் ஒருவர் ஆங்கிலத்தில் அழகாக பேசி, பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.
சமூக வலைதளத்தில் எப்போதும் எளிய மக்கள் தொடர்பான வீடியோக்கள் சில வைரலாவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் சாலை ஓரம் வசிக்கும் பெண் ஒருவர் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ வைரலாக காரணம் என்ன?பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் செசிலியா மார்கிரட் லார்ன்ஸ் என்ற சாலை ஓரத்தில் வசிக்கும் முதிய வயது பெண்மணி. இவர் சமீபத்தில் ஒருவர் இவருடைய பெயர் குறித்து கேட்டபோது தன்னைப்பற்றி அழகாக ஆங்கிலத்தில் அவர் அறிமுகம் செய்து கொள்கிறார். அத்துடன் ஆங்கிலத்தில் ஒரு பாட்டாகவும் தன்னை பற்றி அவர் பாடியுள்ளார்.
இந்த வீடியோவை ஹெக்கர் என்ற பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 4 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக இதே மாதிரி மேற்கு வங்கம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் பெண் ஒருவர் சிறப்பாக பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. அதன் பின்னர் அவர் ஒரு பெரிய பிரபலமாகவே உருவெடுத்தார். அந்தவகையில் தற்போது இவரும் வீடியோவும் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் எப்போது எந்த வீடியோ வைரலாகும் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு சான்று. இந்த வீடியோவில் வரும் வயதான பாட்டி செய்யும் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது தான் இந்த வீடியோ வைரலாக காரணம் என்று கருதலாம்.
மேலும் படிக்க:பிரதமர் பதவிக்கு மக்களின் அடுத்த சாய்ஸ் யாரு தெரியுமா? -இந்தியா டுடே சர்ப்ரைஸ் சர்வே!