உடைந்தது பாகிஸ்தான்.. உருவானது தனி நாடு, அறிவிப்பை வெளியிட்ட பலுசிஸ்தான்.. இந்தியாவுக்கு ஆதரவு
"பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானில் அங்கம் இல்லை, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்தது பலூச் விடுதலை படை"

இந்தியா அவ்வப்போது தீவிரவாதிகள் மூலம் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதை இந்திய அரசாங்கம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும், அதை பாகிஸ்தான் ஏற்க மறுத்து வருகிறது. இந்தநிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே, காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மிகப்பெரிய மோதல் வெடித்தது. இதில் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இந்தியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது.
பலுசிஸ்தான்
பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தலைவலி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பாகிஸ்தானில் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் நிலப்பரப்பில் 43 சதவீதம் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள 80% கனிம வளங்கள் இங்குதான் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்ததிலிருந்து, பலுசிஸ்தான் மக்கள் தங்களை கட்டாயப்படுத்தி பாகிஸ்தான் உடன் சேர்த்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்
பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வருவதே, தங்களுக்கான விடுதலை என பலுசிஸ்தான் மக்களின் பெரும்பகுதியினர் நம்புகின்றனர். விடுதலை வேண்டி பலுசிஸ்தான் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக ஆயுதம் எழுதிய போராட்ட குழுவினரும், பலுசிஸ்தான் விடுதலைக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலுசிஸ்தான் சுதந்திரம் வேண்டும் என பல்வேறு ஆயுத குழுக்கள் போராடி வந்தாலும், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மிகப்பெரிய ஆயுதக் குழுவாக பார்க்கப்படுகிறது. இந்தக் குழு 1970களில் முற்பகுதியில், இளைஞர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆயுத குழு, 1980களில் காணாமல் போனது. தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு முற்பகுதியில், மீண்டும் பலுசிஸ்தான் விடுதலை படை, செயல்பாட்டிற்கு வந்தது. 2006-ஆம் ஆண்டு முதல் இந்த குழுவை பாகிஸ்தான் தடை செய்தது. ஆரம்பத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் மீது சிறு சிறு தாக்குதல்களை நடத்தி வந்தது.
தற்போது இந்த அமைப்பு, மிகப்பெரிய குழுவாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மீது அவ்வப்போது பெரிய தாக்குதல்களை நடத்தி, பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய போது, பலுசிஸ்தான் ராணுவ படையும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனி நாடாக அறிவிப்பு
தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவாக பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றன. பாகிஸ்தானை நம்ப வேண்டாம், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது எனவும் பதிவு செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானை வெளியேறுவதற்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் தனது சமூக வலைதள பக்கத்தில், நாங்கள் எங்களது சுதந்திரத்தை அறிவித்து விட்டோம். இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம் என பதிவு செய்துள்ளார். மேலும் அந்த சமூக வலைதள பதிவில், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார்.
பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருப்பது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியர்கள் பலரும் இதற்கு ஆதரவை தெரிவித்து வருவது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.




















