Maharashtra Blast: மகாராஷ்டிராவில் பயங்கரம்! வெடிபொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து...9 பேர் உயிரிழந்த சோகம்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Maharashtra Blast: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா வெடி விபத்து:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பசர்கான் என்ற கிராமத்தில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் தயாரிக்கப்படும் வெடிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று காலை 9 மணியளவில் ஒரு பெரிய சத்தம் கேட்டிருக்கிறது. அதாவது இந்த வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அங்கு இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பேக்கிங் செய்யும்போது வெடி விபத்து நிகழ்ந்நதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Maharashtra | Nine people died after there was a blast in the Solar Explosive Company in Bazargaon village of Nagpur. This blast happened at the time of packing in the cast booster plant in the Solar Explosive Company. More details awaited: Harsh Poddar, SP Nagpur Rural
— ANI (@ANI) December 17, 2023
9 பேர் உயிரிழப்பு:
இந்த வெடி விபத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும், இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் தொழில்சாலைக்குள் பலரும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
#WATCH | Maharashtra: Visuals from Bazargaon village of Nagpur after nine people died in a blast in the Solar Explosive Company. https://t.co/BmxSR5ZapK pic.twitter.com/O4sBRCDrg2
— ANI (@ANI) December 17, 2023
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் படிக்க