மேலும் அறிய

Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் இரு படகுகள் மோதிக்கொண்ட விபத்தில், நீரில் மூழ்கிய 33 பேர் மாயமாகியுள்ளனர்.

வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் உள்ள தீவு மஜூலி. உலகில் மக்கள் அதிகம் வாழும் தீவுகளில் இந்த மஜூலி தீவும் ஒன்றாகும்.

இந்த தீவில் இருந்து மக்கள் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையான ஜோர்ஹாத் நகரத்தில் உள்ள நீமதிகத்திற்கு வருவதற்கு நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதற்காக, அவர்கள் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பயணிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 120 பயணிகள் பயணம் செய்தனர். மஜூலி தீவில் இருந்து சரியாக 1.5 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்து கொண்டிருந்த மற்றொரு படகுடன் இந்த படகு மோதியது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தாலும், ஏற்கனவே படகில் பயணிகள் மற்றும் வாகனங்கள், சரக்குகள் இருந்ததாலும் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால், கவிழ்ந்த படகில் இருந்த பெண்கள் உள்பட பயணிகள் தங்களது பயத்தில் அலறினர். உடனடியாக தங்களது உயிரை காப்பாற்ற பெண்கள் உள்பட பலரும் ஆற்றில் குதித்தனர். அவர்களை மற்றொரு படகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும், படகு வேகமாக நீரில் மூழ்கியதால் பலரும் படகுடன் சேர்ந்தே நீரில் மூழ்கினர். இதையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாநில பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு நிலவரப்படி, படகில் பயணித்த 42 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். 4 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து படகில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த படகு விபத்து பற்றி மேலும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரு படகிலும் சேர்த்து 120 பயணிகள் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் தற்போதைய நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். 33 பேர் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர் போரிமிதா தாஸ் என்ற பெண் ஆவார். கவுகாத்தியைச் சேர்ந்த போரிமிதா தாஸ், மஜூலி தீவில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் தற்போது ஜோர்கத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் மோசமாக நிகழ்ந்துள்ள இந்த விபத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த விபத்து காரணமாக, அலட்சியமாக செயல்பட்ட மூன்று நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில அமைச்சர் பீமால் போரா விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று இரவே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநில பேரிடர் மீட்புத்துறையினர் இந்த விபத்து தொடர்பாக உதவி எண்களையும் அறிவித்துள்ளது. 1070, 1079 மற்றும் 1077 ஆகியவை அந்த உதவி எண்கள் ஆகும். இந்த விபத்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி நேற்று வருத்தம் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, படகு விபத்து நடைபெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget