Artificial Rain: டெல்லியில் பொய்த்துப் போன செயற்கை மழை - தோல்வி அடைந்தது ஏன்?
டெல்லியில் காற்று மாசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசு செயற்கை மழை பொழிய வைப்பதற்கான சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தியாவின் தலைநகரம் டெல்லி. மத்திய அரசு டெல்லியைத் தலைமையிடமாக கொண்டே செயல்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். கடுமையான காற்று மாசு காரணமாக டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு:
இந்த சூழலில், டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு மேற்காெண்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு மீண்டும் உச்சத்தை எட்டியது. இதையடுத்து, காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழிய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.
செயற்கை மழை:
இதன்படி, இதற்கான சோதனை முயற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இன்று கான்பூரில் இருந்து விமானம் மூலமாக டெல்லியின் சில பகுதிகளில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது. காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்காக சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புராரி, விஹார், கரோல் ஆகிய பகுதிகளில் மேகங்கள் மீது ரசாயனம் தெளிக்கப்பட்டது. ஆனால், போதுமான ஈரப்பதம் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
மக்களுக்கு அபாயம்:
தலைநகரில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தலைநகரில் வாழும் மக்களின் ஆயுட்காலம் சராசரி வாழ்நாளை விட சுமார் 11 ஆண்டுகள் வரை குறையும் அபாயம் இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரித்தன. மேலும், சுவாசப்பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளவர்கள், சிறியவர்கள், முதியவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு வெளிப்பட்ட புகைகளின் தாக்கம் டெல்லியிலும் எதிரொலித்தது. இதையடுத்து, மீண்டும் காற்று மாசு மிகப்பெரிய அளவு அதிகரித்தது.
முதலமைச்சர் நம்பிக்கை:
இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளும் முன்பு, விரைவில் இதை டெல்லி முழுவதும் செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இதுதொடர்பாக கூறும்போது, மேக விதைப்பு மழை டெல்லிக்கு தேவையான ஒன்றாக உள்ளது. இதுதான் முதல்முறை ஆகும்.
டெல்லியில் இந்த முறை மூலமாக மோசமான சுற்றுச்சூழலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். டெல்லி மக்களின் ஆசிர்வாதம் மக்களுக்கு எங்களுக்கு உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தால் எதிர்காலத்தில் இந்த சூழலில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால், தோல்வியில் முடிந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அரசு தயாராகி வருகிறது.





















