Watch Video: ஆந்திராவில் கபடி போட்டியில் வெடித்த வன்முறை - புழுதி பறக்க சரமாரியாக தாக்கிக் கொண்ட வீரர்கள்
Andhra Pradesh Kabaddi Clash: ஆந்திராவில் கபடி போட்டியின் போது ஏற்பட்ட மோதலில், வீரர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
Andhra Pradesh Kabaddi Clash: ஆந்திராவில் கபடி போட்டியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கபடி போட்டியில் மோதல்:
ஆந்திரா மாநிலம் நந்தியால் அருகே 'ஆடுதாம் ஆந்திரா' என்ற தலைப்பிலான கபடி போட்டியின்போது, இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நந்த்கோட்குர் பகுதியில் நடைபெற்ற போட்டியில், சேதன் கோட்டா மற்றும் நாகாதவுர் ஆகிய இரு அணிகள் மோதின. அதன் முடிவில் சேதன் கோட்டா அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணி வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், இரண்டு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
#WATCH | Nandyal, Andhra Pradesh: A clash broke out between two groups of Kabaddi players during a match of the 'Adudam Andhra' tournament in Nandyal
— ANI (@ANI) January 12, 2024
Nandikotkur MPDO Sobharani said, "During the 'Adudam Andhra' event, a Kabaddi match took place between Chetan Kota and Nagataur,… pic.twitter.com/8NNJCs924K
சரமாரியாக தாக்கிக் கொண்ட வீரர்கள்:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சேர்ந்து கொண்டு, இரண்டு தரப்பாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். கைகளால் மட்டுமின்றி அங்கு இருந்த நாற்காலிகளையும் எடுத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் புழுதி பறக்க பெரும் பதற்றமே ஏற்பட்டுள்ளது.