Anand Mahindra: எப்போது நம்பர் 1 பணக்காரர் ஆவீர்கள்: நெட்டிசன் கேள்விக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் பதில்
மகிந்திரா அண்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தொழிலதிபர் ஆவார்.
மகிந்திரா அண்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தொழிலதிபர் ஆவார்.
விளையாட்டு, விஞ்ஞானம், வாழ்வியல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் அவ்வப்போது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்வது உண்டு. அவரைப் பின்தொடர்பவர்கள் எழுப்பும் கேள்விக்கும் அவர் சில சமயங்களில் பதிலளிப்பார்.
இந்நிலையில், ட்விட்டரில் கடந்த 1 மாதத்துக்கு முன் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று பதிலளித்தார் ஆனந்த் மகிந்திரா.
விக்ராந்த் சிங் என்பவர் எழுப்பிய கேள்வி என்னவென்றால், "நீங்கள் இந்திய அளவில் 73வது பணக்காரராக தற்போது உள்ளீர்கள். நீங்கள் எப்போது இந்தியாவில் நம்பர் 1 பணக்காரராக ஆவீர்கள்" என்பது தான்.
அதற்கு ஆனந்த் மகிந்திரா அளித்த பதில் பின்வருமாறு:
Gold, Silver Price Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை...! நகைக்கடைக்கு போகலாமா..? வேண்டாமா..?
"உண்மை என்னவென்றால், நான் ஒருபோதும் பணக்காரனாக மாற மாட்டேன். ஏனென்றால் இது என் விருப்பமாக இருந்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
सच तो ये है कि सबसे अमीर कभी नहीं बनूँगा। क्योंकि ये कभी मेरी ख़्वाहिश ही ना थी… https://t.co/fpRrIf39Z6
— anand mahindra (@anandmahindra) December 11, 2022
மற்றொரு ட்வீட்டில், "ஞாயிற்றுக்கிழமை என்றால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டிய நாள். குடும்பத்தினர் கைகளை பிடித்துக் கொண்டு ஆதரவாக இருக்க வேண்டும். அதுதானே குடும்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sunday is a day for family togetherness. And that’s what families are for: to hold each other, keep each other safe. So this phrase ‘rafting’ is wonderful & the next time someone asks me what I was doing with the family on a holiday, my answer will be: I was Rafting… https://t.co/l6LnPNnT4M
— anand mahindra (@anandmahindra) December 11, 2022
கடற்கீரிகள் தூங்கும்போதும் மற்ற கடற்கீரியின் கையை பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை ஷேர் செய்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் ஆனந்த் மகிந்திரா.