"நக்சல்வாதத்திலிருந்து முழு விடுதலை" தேதி குறித்து அமித் ஷா.. பக்கா ஸ்கெட்ச்
நக்சலைட் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் அதில் இருந்து விலகி, ஆயுதங்களை கைவிட்டு, அரசின் சரணடைதல் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (22.06.2025) ராய்ப்பூரில் நடைபெற்ற நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இதில் சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களின் காவல் துறை தலைவர்களும், மூத்த காவல் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
"நக்சல்வாதத்திலிருந்து முழு விடுதலை"
கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு இயக்கத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விஷ்ணு தியோ சாயின் அரசு தீவிரப்படுத்தி இருப்பதாகக் கூறினார். மாநிலத்தை நக்சல் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கும் திசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 2026ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதிக்குள் நாடு நக்சல்வாதத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார். நமது பாதுகாப்புப் படைகள் வெளிப்படுத்தும் துணிச்சலையும், உளவுத்துறை அமைப்புகளால் வகுக்கப்பட்ட துல்லியமான உத்திகளையும் அடிப்படையாகக் கொண்டு, இந்த இலக்கை நிச்சயமாக நம்மால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.
தேதி குறித்து அமித் ஷா:
நக்சலைட் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் அதில் இருந்து விலகி, ஆயுதங்களை கைவிட்டு, அரசின் சரணடைதல் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். வன்முறைப் பாதையில் உள்ள இளைஞர்கள் அரசை நம்பி சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணையுமாறு அமித் ஷா வலியுறுத்தினார்.
Union Home Minister Shri @AmitShah chairs a review meeting on Naxalism in Raipur with the DGPs/ADGPs and senior officials of Chhattisgarh, Andhra Pradesh, Telangana, Madhya Pradesh, Maharashtra, Jharkhand, and Odishahttps://t.co/5oI5QCEcyc pic.twitter.com/akcXR4pkZu
— PIB - Ministry of Home Affairs (@PIBHomeAffairs) June 22, 2025
இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் வளர்ச்சிப் பயணத்தில் இணைய முடியும் என்றும் சரணடையும் நக்சலைட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.





















