மேலும் அறிய

"எந்த அடிப்படை வசதியும் இல்ல" திரிபுராவுக்கு அள்ளிக் கொடுத்த அமித் ஷா!

25 ஆண்டுகளாக, பழங்குடி மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ. 668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர், ஹடுக்லாவ் பாரா புரு செட்டில்மென்ட் காலனியில் புரு ரியாங் சமூக மக்களுடன் அமித் ஷா உரையாடினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், புரு ரியாங் சமூகத்தைச் சேர்ந்த 38,000 பேரை குடியமர்த்த மத்திய அரசு வசதி செய்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் புரு ரியாங் மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

"துன்பங்களை கண்டு புரிந்து கொண்டவர் மோடி"

நீண்ட காலமாக இங்கு ஆட்சி செய்தவர்கள் புரு ரியாங் மக்களின் வலியை ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால், அவர்களின் துன்பங்களைக் கண்டு, மோடி புரிந்துகொண்டுள்ளார். திரிபுராவில் மாற்றம் ஏற்பட்டு, தங்கள் கட்சி அரசை அமைத்தபோது, அந்த நேரத்தில் மத்தியில் நரேந்திர மோடி அரசும் இருந்தது.

அப்போதைய உடன்படிக்கையின் படி, 40,000 பேர் குடியேற்றப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய  ஆட்சிக் காலத்தில், பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் புரு ரியாங் மக்களுக்காக பிரதமர் மோடி ஒரு திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், 11 கிராமங்களை ரூ .900 கோடி செலவில் மறுகுடியமர்த்தவும் திட்டத்தை உருவாக்கினார்.

அமித் ஷா பேசியது என்ன?

இந்த கிராமங்களில் தற்போது மின்சாரம், சாலைகள், குடிநீர், இணைப்பு, சூரிய ஒளி தெரு விளக்குகள், மானிய விலையில் தானியக் கடைகள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன. இந்த 11 காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

இந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், சுகாதார அட்டைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.

இந்த மக்களுக்கு தற்போது 1200 சதுர அடி மனைகள் சொந்தமாக இருக்கிறது. மத்திய  அரசின் உதவியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, மோடி அரசு அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ 5000 உதவித்தொகையை வழங்குகிறது" என்றார்.

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget