kareena kapoor Covid-19: கரீனா கப்பூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு
கரீனா கப்பூர் நோய்த் தொற்றில் இருந்து குணடமடைந்து மீண்டும் முழு ஆரோக்கியத்தை பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் - கரீனா கப்பூர் சகோதரி
![kareena kapoor Covid-19: கரீனா கப்பூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு amid Omicron scare kareena kapoor corona samples sent for Genome sequencing kareena kapoor Covid-19: கரீனா கப்பூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/14/64039dd58becf6fa440f51eca32d3769_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கரீனா கப்பூரின் மாதிரி மரபணு வரிசைக்கு அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வகங்களில் செய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வு அடிப்படையில், அவருக்கு ஒமிக்ரான் பிறழ்வுகள் இருப்பது கண்டறியப்படும்.
முன்னதாக, பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர், அம்ரிதா ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். வழிகாட்டுதலின் படி, மிக லேசான / அறிகுறி நிலையில் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கரீனா கப்பூர் இன்ஸ்டா பக்கத்தில் தனது உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Actors Kareena Kapoor Khan & Amrita Arora tested positive for #COVID19. Both of them had violated COVID norms & attended several parties. BMC has ordered people, who came in contact with the two actors, to undergo RT-PCR test: BMC (Brihanmumbai Municipal Corporation)
— ANI (@ANI) December 13, 2021
(File pic) pic.twitter.com/wKqoqgFM4x
மொட்டை மாடியில் சைப் அலி கான் தேநீர் அருந்துவது போல் உள்ள போட்டோவை பகிர்ந்த அவர், " கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாம் இன்னும் நேசம் கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடைய, கரீனா கப்பூர் நோய்த் தொற்றில் இருந்து குணடமடைந்து மீண்டும் முழு ஆரோக்கியத்தை பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென அவரின் சகோதரி கரிஷ்மா கப்பூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா விதிமுறைகளை மீறி, நடிகை கரீனா கப்பூர் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக முன்னதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியிருந்தது. பிரபல இயக்குனர் கரன் ஜோகர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கரீனா கப்பூர் கலந்து கொண்டதாகவும், இதில் பங்கு கொண்ட மற்ற அனைவரும் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், கரீனா காப்பூருடன் தொடர்பில் இருந்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களை மிகச்சரியாகக் கண்டறியந்து, அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அம்மாநகாராட்சி முடிவெடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)