மேலும் அறிய

குத்தகைக்கு விடப்பட்ட விமான நிலையங்கள்... டெல்லி, மும்பையில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்

”சென்ற 5 ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது” - விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர்

”தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின்படி 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை இந்திய விமான நிலைய ஆணையம் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.

இவற்றில் செயல்பாடு, மேலாண்மை, நீண்டகால குத்தகை அடிப்படையில் மேம்பாட்டிற்காக டெல்லி, மும்பை, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய எட்டு விமான நிலையங்களை பொது, தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.

இவற்றில் டெல்லி, மும்பை ஆகிய விமான நிலையங்கள் 2006ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது” என மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் விகே சிங் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் அதில் கிடைக்கும் வருவாயை, அனைத்து விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப்  பணிகளுக்கு உபயோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து அமளி எழுந்த நிலையில், மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என  பாஜக உயர்மட்டத் தலைவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. 

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து  எதிர்க்கட்சித் தலைவர்களும் இன்று காலையே ஆலோசனையில் ஈடுபட்டனர். அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை பற்றி கேள்வி எழுப்ப அவர்கள் முடிவு செய்த நிலையில் இந்தக் கூட்டம் மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் நடைபெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: Parliament Rahul Gandhi : ”வெட்கக்கேடானது” ராகுல் காந்தியை தாக்கி பேசிய மத்திய அமைச்சர்கள்...பதிலடி தந்த எதிர்க்கட்சிகள்..முதல் நாளே முடங்கிய நாடாளுமன்றம்

தன்பாலீர்ப்பாளர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு... இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட்டு வாதம்... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget