(Source: ECI/ABP News/ABP Majha)
Airlines : நடுவானில் வாக்குவாதம்... ஆக்ரோஷமான தாக்குதல்... விமான பெண்ணிடம் அத்துமீறிய பயணி...!
கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை கடுமையாக திட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Airlines : கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை கடுமையாக திட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணியாளரிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது.
பயணி ரகளை
அந்த வரிசையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவாவில் இருந்து நேற்று டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 150 பயணிகளுக்கு மேல் பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஒரு ஊழியரை தாக்கி உள்ளார்.
இதனால் விமானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது அந்த பயணி ரகளையில் ஈடுபட்டதுடன், டெல்லியில் விமானம் நிலையத்தில் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள் இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ரகளையில் ஈடுபட்ட பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.
இதுகுறித்து விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இதுபற்றி விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகள் பாதுகாப்புடன் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பயணிகளின் இதுபோன்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நாங்கள் முழு ஆதரவையும் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானி ஒருவர் தனது தோழி டிஜிசிஏ விதிகளை மீறி, அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (cockpit) அழைத்து சென்றுள்ளார். காக்பிட்டுக்குள் அழைத்து வந்ததோடு விமானி பணிப்பெண்ணை கடுமையாக பேசியதாக தெரிகிறது. இதனால் விமான பணிப்பெண் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா விமானம் எந்தவித உடனடி தீர்வும் எடுக்கவில்லை. இதனால் விமான போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்திற்காக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தும், விமானியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.