மேலும் அறிய

Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!

பாகிஸ்தான் விமானப்படையை உடைத்து பாலகோட் தாக்குதல் மேற்கொண்டதாக முன்னாள் இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Balakot Airstrike: நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி?

தேர்தல் நடந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய விமான படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா பாலகோட் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் விமானப்படையை உடைத்து பாலகோட் தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

பாஜகவில் சமீபத்தில் இணைந்த அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசுகையில், "பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத தெளிவான கொள்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.

ஒரு பயங்கரவாத சம்பவம் நிகழ்கிறது. எல்லைக்கு அப்பால் சென்று குற்றவாளிகள் மறைந்து கொண்டபோது, ​​​​இந்திய பாகிஸ்தான் எல்லை முழுவதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, ​​எல்லையில் உள்ள  பயங்கரவாதிகள் பதுங்கு குழியில் சென்று மறைந்து கொண்டனர். அவர்களை தேடி கண்டுபிடித்தோம். அப்போதுதான், பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.

பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி:

இது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன்மூலம், வலுவான செய்தியை அனுப்பினோம். அதன் பிறகு இதுபோன்ற (பயங்கரவாத) சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த (வான்வழித் தாக்குதல்) பாகிஸ்தானின் விமானப்படை மற்றும் ராணுவ பாதுகாப்பை உடைத்து நடத்தப்பட்டது.

எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை. எந்தச் சூழலுக்கும் தயாராக இருந்தோம். நம் நாட்டில் யாராவது பயங்கரவாதத்தை பரப்பினால், அவர்கள் எங்கு மறைந்தாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள். அர்த்தம் தெளிவாக உள்ளது. பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமான படை பாகிஸ்தான் பாலகோட்டில் பதில் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் பந்தர் என்ற பெயரில் இந்திய விமான படையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.   

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு தொடக்கப்புள்ளி:

இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக, கடந்த 2016ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் உரியில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பதில் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.

இதையடுத்து, 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிபர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த 12 நாள்களில், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அதிகாலை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget