மேலும் அறிய

Influencers: தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு விளம்பரம்.. ஸ்டார்களுக்கு ஆப்பு..இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் கிடுக்கிப்பிடி

யார் எல்லாம் செலிபிரட்டி என்பது குறித்து இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) இன்று வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் குறைவான ஃபாலோயர்களை வைத்து கொண்டு, தங்களை செலிபிரட்டிகளாக கருதுவோர் ஏராளம். அதே சமயத்தில், அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் செலிபிரட்டிகளும் சமூக பொறுப்பின்றி, தேவையற்ற பொருள்களுக்கு விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

யார் எல்லாம் செலிபிரட்டிகள்?

இந்த நிலையில், யார் எல்லாம் செலிபிரட்டி என்பது குறித்து இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) இன்று வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அரசு சாரா அமைப்பான விளம்பர தர நிர்ணய கவுன்சில், விளம்பரத் துறையின் சுய ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது.

இந்த கவுன்சில் வெளியிட்ட விதிகளின்படி, 5 லட்சம் ஃபாலோயர்கள்  வைத்திருப்பவர்களே செலிபிரட்டிகளாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளம்பரங்களில் நடித்து ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் மேல் வருமானம் ஈட்டுபவர்களும் செலிபிரட்டிகளாக கருதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இந்த செலிபிரட்டிகள் அனைவரும் இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் விதிகளை பின்பற்றுவது அவசியமாகிறது. ஒரு பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க கையொப்பமிடுவதற்கு முன்பு, தகுந்த விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட செலிபிரட்டியை இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அழைக்கும்போது, அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். அதேபோல, தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது.

தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு விளம்பரம் செய்த செலிபிரட்டிகள்:

இதுகுறித்து ஏஎஸ்சிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "யார் எல்லாம் செலிபிரட்டிகள் என வரையறுப்பது அவசியமாகிறது. ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளாகவே, வெகுஜன மக்கள் மத்தியில் சமூக ஊடக பிரபலங்கள் செலுத்தும் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

வரலாற்று ரீதியாகவே, பெரும்பாலும் பிரபலமான நடிகர்களும் விளையாட்டு வீரர்களும்தான் குறிப்பிட்ட பிராண்ட்களுக்கு விளம்பரம் தேடி தந்து வந்துள்ளனர். வெகுஜன மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்" என்றார்.

ஆனால், சமீப ஆண்டுகளாகவே, சமூக ஊடக செலிபிரட்டிகள், விதிகளை மீறி விளம்பரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விவரித்த ஏஎஸ்சிஐ, "விதிகளை மீறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதற்கான விதிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், தவறான விளம்பரங்களில் செலிபிரட்டிகள் நடித்ததாக 500 விளம்பரங்கள் இந்த நிதியாண்டில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏஎஸ்சிஐ தலைமை நிர்வாகியும் பொதுச் செயலாளருமான மனிஷா கபூர் கூறுகையில், "சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான, நுகர்வோரிடம் நெருக்கமான தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ள பல செலிபிரட்டிகள் உள்ளனர். இந்த செலிபிரட்டிகளை நம்பும் மக்கள் மீது இவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாதது" என்றார்.

இதையும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget