May Month Bank Holidays: அடுத்த மாசம் பேங்க் போற ப்ளான் இருக்கா ? அப்போ இந்த விடுமுறை பட்டியலை பாத்துட்டு போங்க..
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை பட்டியலின் படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு பல நகரங்களில் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை பட்டியலின் படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு பல நகரங்களில் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும். வணிக ரீதியாக வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், ஆன்லைன் வர்த்தகம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் வரும் விடுமுறை நாட்களில் வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இணைய வழி வங்கி செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வங்கி விடுமுறை நாட்களைப் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் பார்ப்பது அவசியம் என கூறப்படுகிறது.
மக்கள் அடுத்த மாதம் முக்கியமான விஷயங்களுக்கு வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் முதலில் விடுமுறை பட்டியளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் படி மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா என்றால் இல்லை. உள்ளூர் விடுமுறை என அனைத்தையும் கணக்கில் கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வழக்கமாக எல்லா மாதத்திலும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செய்லபடும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகும்.
விடுமுறை பட்டியல்:
மகாராஷ்டிரா தினம்/மே தினம்: மே 1 2023
புத்த பூர்ணிமா: மே 5 2023
ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்: மே 9 2023
மாநில நாள் (state day): மே 16 2023
மகாராணா பிரதாப் ஜெயந்தி: மே 22 2023
திரிபுராவில் காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி: மே 24 2023
வார இறுதி மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகள்
மே 7 2023: ஞாயிறு
மே 13 2023: இரண்டாவது சனிக்கிழமை
மே 14 2023: ஞாயிறு
மே 21 2023: ஞாயிறு
மே 27 2023: நான்காவது சனிக்கிழமை மே 28: ஞாயிறு
கடந்த மாதம் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.