மேலும் அறிய

Ideas Of India 2023: ஃபோகஸ் ஆன் "புதிய இந்தியா": வருகிறது ABP நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" மாநாடு

புதிய இந்தியாவை கட்டமைப்பதில், ABP ஊடக குழுமம் தமது பங்கினை செலுத்தும்வகையில், அதற்கான புதிய வலுவான யோசனைகளைக் கொண்டு வர ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் 2-வது மாநாட்டினை நாளை நடத்துகிறது.

"புது இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில்  முத்திரைப்பதித்த தொழில் அதிபர்கள்,  கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடமிருந்து எண்ணங்களைக் கேட்பதற்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாட்டை பார்த்து, புதிய இந்தியாவிற்கான பார்வையை விலாசப்படுத்துவோம்.

மும்பையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு,  உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக -  அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், 'புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது' என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள்,  இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

பல்வேறு காரணிகளால், உலக அளவில் பல்வேறு குழப்பங்களும் நிறைகுறைகளும் நிலவி, பெரும் சவால்கள் நிறைந்த ஒரு காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  அறிவியலும் தொழில்நுட்பமும் அடுத்தக்கட்ட வாழ்வியல் தளத்தை உருவாக்கும்வகையில் பல கட்டமைப்புகளை உலகில் உருவாக்கி வருகிறது.  இதில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இப்படியொரு சூழலில் நடைபெறும் இந்த மாநாட்டில், பல புதிய யோசனைகள், நம்மை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.

தற்போது, உலகின் ஒரு பக்கத்தில், உக்ரைன் மீதான படையெடுப்பு ஓராண்டு காலத்தை நெருங்குகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடுமையான எதிர்ப்பையும், மிகச்சிறிய ஆதாயங்களையும் எதிர்கொண்ட போதிலும், போரில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டாமலே இருக்கிறார்

சீனாவை எடுத்துக்கொண்டால், இரும்புக்கரம் கொண்டு கோவிட் -19 தொற்றுநோயை ஒடுக்கும் அந்நாட்டின் பக்கவிளைவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்களும் வெடிக்கத் தொடங்கிவிட்டன.

நாட்டின் ஹிஜாப் சட்டத்தை மீறிய 22 வயதான பெண் மாசா அமினியின் காவல் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் தெருக்களில் இறங்கியதை ஈரானின் வரலாறு கண்டிருக்கிறது.

வட அமெரிக்காவில், சமூக பழமைவாத சக்திகள் சேர்ந்து, தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன.

தெற்காசியா, பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிகள் ஆய்வுக்கு இவற்றை உட்படுத்துகிறது. எல்லைகளைத் தாண்டி, சுதந்திரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து நுழைவதற்கு வழியில்லாமல் காத்திருக்கும் அகதிகளின் பிரச்சனைகள் தொடர்கின்றன. வேலைவாய்ப்பு மற்றும் உயரும் செலவுகள் ஆகியவை வீடுகளில் முக்கியப் பிரச்சினைகளாக மாறிவிட்டன.

இந்தியாவை பொறுத்தமட்டில்,  2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல், எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் மற்றும் முழுமையான புதிய தலைமுறை என இந்தியாவிற்காக, ஒரு பிஸியான டைம்லைன் காத்திருக்கிறது.

தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைய, அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, 'மேக் இன் இந்தியாவை' நோக்கி, அதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது. நாட்டில் உலகளாவிய முதலீடு , உள்ளூர் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முனைப்பாக உள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2-வது மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வனி வைஷ்ணவ், பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள் ஆஷா பரேக்  ஆயுஷ்மான் குரானா, பெருமைமிகு எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், தேவ்தத் பட்டநாயக் உள்ளிட்ட பல்துறைகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாளர்கள் 'புது இந்தியாவை’ வலுவாகவும் சிறப்பாகவும் கட்டமைப்பது குறித்து தங்களது யோசனைகளை எங்கள் மூலம் உங்கள் முன் வைக்க இருக்கிறார்கள். எனவே, தொடர்ந்து, ஏபிபி குழுமங்களின்  செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல்தளங்களில் இணைந்திருங்கள். புது இந்தியாவை உருவாக்குவதில் நாமும் பங்களிப்போம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget