News Wrap - Abpநாடு | இன்றைய (30.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
News Wrap - Abpநாடு | இன்றைய (30.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
தமிழ்நாடு:
1. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை எஸ்பிசிஐடி எஸ்பி அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாள், நிர்வாக அமைக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
3. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏரி, குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்ட விரோதமானது எனத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியா:
1. இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஓமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
2. கிரிப்டோ கரன்ஸி ஒழுங்குமுறை மசோதா கொண்டு வருவதோடு வருமான வரி சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, க்ரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் லாபத்தையும் வருமான வரிக்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று ஒருபுறம் பேசப்பட்டாலும் க்ரிப்டோ கரன்ஸியை அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
3. மாநிலங்களவையில் 12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டத்தை திரும்ப பெறாவிட்டால் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
உலகம் :
1. துருக்கி, இஸ்தான்புல் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த புயல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று மற்றும் நாளை கடுமையான புயல்கள், பலத்த காற்று மற்றும் அதிக மழைப்பொழிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் துருக்கி மோசமான நிலையை சந்திக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
2. செக்ஸ் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் என்னுடைய உருவத்தைப் போலவே பொம்மையை உருவாக்கி இருப்பதாக இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றம்:
1. சென்னை புழல் காவாங்கரை கே.எஸ்.நகர் 6ஆவது தெருவை சேர்ந்த யாஸ்மின் (28), கடந்த 25ஆம் தேதி தனது இரண்டாவது குழந்தையை 2.50 லட்சத்திற்கு விற்பனை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.
2. சென்னை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான செல்வராஜ், இவரது மனைவி கண்ணகி (49). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், செல்வராஜ் கடந்த 5 நாட்களாக உணவகத்தை திறக்காதநிலையில், உணவகத்தை திறந்து வியாபாரம் பார்க்குமாறு மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் போதையில் மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் கிழித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. மதுரை அருகே இரவில் சினிமாவிற்கு சென்றுதிரும்பிய பெண்ணை வீட்டிற்குபாதுகாப்பாக அழைத்துசெல்வதாக கூறி காவலர் முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சினிமா:
1. மோகன்லால் நடிப்பில்மரைக்காயர் படத்தின் மலையாள ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தநிலையில், தற்போது இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
2. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாகியுள்ள 83 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
3. பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பு. சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் மாநாடு பேசியுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
விளையாட்டு:
1. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளனர். அதில், கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கானை ஏலம் நடப்பதற்கு முன்பே எங்கள் அணியிலிருந்து விலகி புதிய லக்னோ அணிக்கு சென்றதாக புகார் அளித்துள்ளனர்.
2. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய கம்பீர், ருதுராஜ், ஜடேஜா, டு ப்ளெசி, சாம் குரான் ஆகியோரை தக்க வைப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்