மேலும் அறிய

News Wrap - Abpநாடு | இன்றைய (17.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

News Wrap - Abpநாடு | இன்றைய (17.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு..

தமிழ்நாடு:

1.பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

2. சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

3. நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியா:

1. உலகிலேயே மிகவும் சுத்தமான ஆறு மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி தான் என்று இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சினிமா:

1. 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

2. ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு:

1. ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் கும்ளே இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து கங்குலி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

3. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

4. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

டெக்னாலஜி: 

1. இன்ஸ்டாகிராம் சமீபத்தில் லைவ் ஷெட்யூலிங் என்னும் புதிய ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.

2. வாட்ஸ்அப்பில் நிரந்தரமாக சாட்களை ஹைட் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.அதன்படி, எந்த சாட்டிலும் நீண்ட நேரம் அழுத்தினால் வாட்ஸ்அப் செயலியின் மேல் ஒரு காப்பகப் பெட்டியை () ( Archive box (  )) காண்பிக்கும். அதை பயன்படுத்தி உங்கள் சாட்டை மறைக்க அந்தப் பெட்டியை க்ளிக் செய்யலாம்.

குற்றம்:

1. கள்ளக்குறிச்சியில் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத சுமார் 15 காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி காவலர்கள் மீது குறவர் இன பெண் புகார் அளித்துள்ளார். 

2. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பெண் ஒருவர் வரதட்சணை கொடுக்காததால்  அவரது கணவர் மற்றும் மாமியாரால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

3. திருவாரூரில் இளைஞர் தலைத்துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget