ABP-CVoter Survey: மே 10-ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் பிரச்னை எது?
லிங்காயத்து இட ஒதுக்கீடு, ஹிஜாப் சர்ச்சை உள்ளிட்டவை வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஏபிபி சி வோட்டர்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும், அதன் முடிவுகள், மே 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து, ஏபிபி நியூஸ் -சி வோட்டர்ஸ் இணைந்து, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக, கர்நாடக வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் பிரச்னை எது என்ற தலைப்பிலும் கணிப்புகளை நடத்தப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் பிரச்னை: ABP News - CVoter Team-ன் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்
வரும் தேர்தலில், லிங்காயத்து இட ஒதுக்கீடு பிரச்னை மற்றும் ஹிஜாப் தொடர்பான பிரச்னை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என 30.8 சதவிகிதம் பேரும், மதரீதியான பிரச்னை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என 24.6 சதவீதம் பேரும், ஆளும் கட்சியின் செயல்பாடுகளின் தாக்கம் 13.3 சதவிகிதமும், தேசியவாதம் மற்றும் அடையாள அரசியலின் தாக்கம் இருக்கும் என 6.8 சதவிகிதம் பேர் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சினை இருக்கும் என்றும் 14.6 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
கர்நாடகாவின் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு வாய்ப்பளிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு 39.1 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா என பதில் அளித்துள்ளனர்.
View this post on Instagram
அதற்கு அடுத்தபடியாக, 31.1 சதவிகிதத்தினர் பாஜகவின் பசவராஜ் பொம்மையே முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எச். டி. குமாரசாமிக்கு ஆதரவாக 21.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து ஏபிபி நாடு நேரலை: