ஆபத்தான, அடர்ந்த வனப்பகுதியை சுற்றிப்பார்க்க பைக்கில் சென்ற காதலர்கள்.. புலியால் நிகழ்ந்த விபரீதம்..
தனது காதலியுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்ற 21 வயது இளைஞர் புலி தாக்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மஹாராஷ்ட்ராவில், தனது காதலியுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்ற 21 வயது இளைஞர் புலி தாக்கி உயிரிழந்தார்
மஹாராஷ்டிராவில் உள்ள கஜ்ஜிரோலி மாவட்டத்தில் 21-வயது இளைஞர் அஜித் நகடே (Ajit Nakade) தனது காதலியுடன் உசேகான் காடுகளின் (Ussegaon forest) அடர்ந்த பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். Duo வாகனத்தில் சென்ற இருவரும் காடுகளின் அடர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது திடீரென புலி ஒன்று அவர்களை தாக்கியுள்ளது. இருவரும் புலியிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அஜித் நகடே புலியிடம் மாட்டி இறந்துவிட்டார். இவருடன் உடன் வந்த காதலி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், இருவரும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடக்கும் இடமாகும். அந்த புலி சி.டி.1 (CT1) என்று பெயரிடப்படுள்ளது. லகாந்தூர் மற்றும் பந்தாரா பகுதிகள் புலி தாக்கி ஏற்கனவே இரண்டு நபர்கள் இறந்திருக்கிறார்கள். அந்த நிகழ்விற்கு இப்புலி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.’ இது குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம். இந்த சி.டி.1 புலியின் படங்கள் கேமராவிலும் சரியாக பதிவாகவில்லை. புலியை புடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.’ என்றார்
Couple romancing in forest patch of Gadchiroli invited #tigerattack 2day. Unfortunately boy got killed on spot, girl could manage 2escape with minor injuries. Same tiger who took human kill in same area on 14th April last month. #Vidarbha @CMOMaharashtra @OfficeofUT @AUThackeray pic.twitter.com/fKaq4IiGEV
— NETWA DHURI (@netwadhuri) May 3, 2022
மற்றொரு வன அதிகாரி கூறுகையில், ‘ இந்த சி.டி.1 (CT1) புலி பிரம்மபுரி வன பகுதியின் சிம்னூர் பகுதியைச் சேர்ந்தது. புலியை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டில், வாகனங்களுக்கு அனுமதில்லை . ஆனால், இவர்கள் இருவரும் டாடா சுமோ காரில் காட்டுக்கு வந்து, உடன்வந்த ஓட்டுநரை ஓர் இடத்தில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பைக்கில் சென்றிருக்கிறார்கள். அங்கு வன உயிர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் அவர்கள் புலியிடம் சிக்கிக் கொண்டர்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்